Trending News

மன்னார் ஆயர் இல்லம், திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு சஜித் பிரேமதாச விஜயம்

(UTV|COLOMBO) – ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச இன்று காலை (08) மன்னார் ஆயர் இல்லம்,திருக்கேதீஸ்வர ஆலயம் ஆகியவற்றுக்கு விஜயம் மேற்கொண்டார்.

அமைச்சர் றிஷாட் பதியுதீனின் அழைப்பின் பேரிலேயே இந்த விஜயம் அமைந்தது. ஆயர் இல்லத்திற்கு விஜயம் செய்த சஜித் பிரேமதாச குழுவினர் மன்னார் ஆயர் இமானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையை சந்தித்து பேசினார்.சுமார் அரைமணிநேரம் நீடித்த இந்த சந்திப்பில் மன்னார் மாவட்டத்தின் எதிர்கால அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.சஜித் பிரேமதாசவுக்கு மன்னார் ஆயர்,ஆசி வழங்கினார்.

இதன் பின்னர் மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச மற்றும் அமைச்சர் றிஷாட் பதியுதீன் ஆகியோர் ஆலயத்தின் அறங்காவலர்கள் மற்றும் ஆலய குருக்களை சந்தித்தனர்.திருக்கேதீஸ்வர ஆலயத்தில் நிர்மாணிக்கப்பட்டுவரும் புதிய ஆலய கட்டிட நிர்மாணப்பணிகளையும் இவர்கள் பார்வையிட்டனர். அறங்காவலர்கள் ஆலய கட்டிடப் பணிகுறித்த தேவைகளை ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிடம் எடுத்துரைத்தனர்.

-ஊடகப்பிரிவு-

Image may contain: 5 people, people smiling, people standing

Image may contain: 3 people, people smiling

Image may contain: 5 people, people standing and indoor

Image may contain: 7 people, people smiling, people standing and outdoor

Image may contain: 14 people, people standing and outdoor

 

Related posts

Railway operations on Kelani Valley Line delayed

Mohamed Dilsad

Indictment served on Avant-Garde, Rakna Lanka and 9 accused

Mohamed Dilsad

Sri Lanka Under 19 Squads named

Mohamed Dilsad

Leave a Comment