Trending News

பாலியல் முறைப்பாடு – மூவர் பணி இடைநிறுத்தம்

(UTV|COLOMBO) – ஹெம்மாதகமை பொலிஸ் நிலைய அதிகாரிகள் மூவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.

உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் இருவர் ஆகியோரே இவ்வாறு பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.

யுவதியொருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டதாக கிடைப்பெற்ற முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்காமை காரணமாக குறித்த அதிகாரிகள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியடசர்கள் ருவான் குணசேகர, தெரிவித்தார்.

கேகாலை பிரதேசத்தில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று பஸ்ஸில் வீடு திரும்பிக் கொண்டிருந்த யுவதி, அவருடன் பயணித்த இளைஞனால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் ஹெம்மாதகமை பொலிஸ் நிலையத்தில் குறித்த யுவதியின் தந்தை முறைப்பாடு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

Facebook ‘to launch ads within videos’

Mohamed Dilsad

காலநிலை மாற்ற அறிக்கையில் எனக்கு நம்பிக்கை இல்லை

Mohamed Dilsad

 ගැබ් ගෙල පිළිකා වැලැක්වීමේ අරමුණින් නව එන්නතක්

Mohamed Dilsad

Leave a Comment