Trending News

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் விசேட அறிக்கை

(UTV|COLOMBO) – ஆட்பதிவு திணைக்கத்தினால் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை உறுதிப்படுத்தி அதனை வாக்களிப்பதற்கு பயன்படுத்தலாம் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்வதற்காக ஆட்பதிவு திணைக்களத்தில் நேற்று(08) வரை விண்ணப்பங்களை சமர்பித்த வாக்காளர்களுக்கு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க ஏதுவான ஆவணம் வழங்கப்பட்டுள்ளதாக குறித்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதற்கமைய குறித்த ஆவணத்தில் அச்சிடப்பட்ட பெயர், முகவரி, அடையாள அட்டை இலக்கம் மற்றும் புகைப்படம் அடங்கிய தேசிய அடையாள அட்டையின் அனைத்து விபரங்களும் உள்ளடங்கியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

அதேபோல் தற்போது வாக்களிக்க பயன்படுத்தப்படும் அடையாள ஆவணங்களுக்கு மேலதிகமாக தேசிய அடையாள அட்டையை சரிபார்க்கும் கடிதமும் வாக்களிப்பின் போது ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல் ஆணைக்குழு மேலும் கூறியுள்ளது.

Related posts

24-Hour water cut in Colombo today

Mohamed Dilsad

தேசிய தொல்பொருளியல் தினம் நாளை அனுஷ்டிப்பு

Mohamed Dilsad

Buddhist clerics calls to eliminate misconceptions on Wilpattu

Mohamed Dilsad

Leave a Comment