(UTV|COLOMBO) – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான அரசாங்கத்தின் இறுதி பாராளுமன்ற அமர்வு எதிர்வரும் 11ஆம் திகதி நடைபெறவுள்ளதாக சபநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
நிலையியற் கட்டளைக்கு அமைவாக பிரதமரின் கோரிக்கைக்கிணங்க 11 ஆம் திகதி காலை 11.30 பாராளுமன்றம் கூடுகிறது.
இந்த அமர்வில் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ள வேண்டுமென சபாநாயகர் கரு ஜயசூரிய மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்