(UTV|COLOMBO) – புதிதாக திறக்கப்பட்ட தெற்கு அதிவேக நெடுஞ்சாலைகளுக்கான கட்டணங்கள் குறித்து அதி விசேட வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளன.
நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சினால் குறித்த அதி விசேட வர்த்தமானி அறிவிக்கப்பட்டுள்ளன.
அந்தரவெளவில் இருந்து ஹம்பாந்தோட்டை வரையான நெடுங்சாலைக்கும், பரவாகும்புகவில் இருந்து அந்தரவெள ஊடாக மத்தல வரையான தெற்கு அதிவேக நெடுஞ்சாலைக்கும், கடவத்தையில் இருந்து கெரவலபிட்டி வரையான வெளிப்புற சுற்றுவட்டம் ஆகிய நெடுஞ்சாலைகளுக்கான கட்டணங்கள் அதி விசேட வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளன.
பரவாகும்புக மற்றும் ஹம்பாந்தோட்டைக்கு இடையிலான அதிவேக வீதியில் பயணிக்கும் சகல வாகனங்களும் ஒரே பிரிவாகக் கருதி கட்டணம் அறவிடப்படும். வெளியேறும் பாதையில் பயணிக்கும் வாகனங்கள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு கட்டணம் அறிவிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
பரவாக்கும்புகவிற்கும் சூரிவெளவிற்கும் இடையில் பயணிக்கும் வாகனங்களுக்கு 100 ரூபாவும், சூரிவெள மற்றும் மத்தளவிற்கு இடையில் பயணிக்கும் வாகனங்களுக்காக 100 ரூபாவும் கட்டணமாக அறவிடப்படும். ஹம்பாந்தோட்டை மற்றும் பரவாக்கும்புகவிற்கும் இடையில் பயணிக்கும் வாகனங்களுக்கு 200 ரூபா கட்டணம் அறவிடப்படு.