(UTV|COLOMBO) – 2019ம் ஆண்டின் இறுதியும் விசேட பாராளுமன்ற அமர்வும் இன்று(11) முற்பகல் 11.30 முதல், பிற்பகல் 2.30 வரை இடம்பெறவுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்திருந்தார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள கோரிக்கையின் அடிப்படையிலும் கடந்த வியாழக்கிழமை கட்சித் தலைவர்களால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், விளையாட்டுத்துறையுடன் தொடர்புடைய தவறுகள் குறித்த சட்டமூலம் தொடர்பில் விவாதிப்பதற்காகவும் குறித்த பாராளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
கடந்த 7ஆம் திகதி இடம்பெற்ற பாராளுமன்ற கூட்டத்தொடரை அடுத்து, எதிர்வரும் டிசம்பர் மாதம் 3ஆம் திகதி வரை பாராளுமன்றத்தை ஒத்திவைப்பதற்கு முன்னதாக தீர்மானிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.