(UTV|COLOMBO) – இலவசமாக சேவையை முன்னெடுக்கும் சுயாதீன வேட்பாளராக தாம் செயற்படுவதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஷ தெரிவித்துள்ளார்.
தலவாக்கலையில் நேற்று(10) இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
கணிதம் மற்றும் விஞ்ஞான பாடத்திற்கான முறையான ஆசிரியர்கள் இல்லாமையினால் மலையகத்தில் உள்ள மாணவர்கள் பெரிதும் கஷ்டபடுகிறார்கள் கவலைபட வேண்டாம் இவை அனைத்தையும் நான் தீர்த்து வைப்பேன்.
எனது தந்தை ரணசிங்க பிரேமதாச அவர்கள் ஜனாதிபதியாக இருந்த போது தோட்டத்தில் வாழும் சுமார் 12 லட்சம் பேருக்கு ஒரே நாளில் பிரஜா உரிமை பெற்றுக் கொடுத்தார். அவரது மகனான நான் சஜித் பிரேமதாச ஆகிய நான் எதிர்வரும் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் அடுத்த நாளே மலையக மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக ஜனாதிபதி செயலணி ஒன்றினை உருவாக்குவேன்.
நான் மிகவும் அதிஷ்டமானவன் காரணம் உங்கள் பிரச்சினைகளை தீர்க்க கூடிய இதய பூர்வமானவர்கள் இன்று என்னுடன் இருக்கிறார்கள். அவர்களிடம் பொய் களவு பண டீல் கிடையாது.
அவர்கள் உங்களுக்க நல்லதே செய்ய வேண்டும் என்றே நினைக்கின்றார்கள். அன்பார்ந்த தோழர்களே உங்களுக்கு நான் ஒனறை தெரிவித்து கொள்ள விரும்புகிறேன் தோட்டத் தொழிலாளர்களுக்காக எனது தேர்தல் விஞ்ஞாபனததில் ஒரு பந்தி உள்ளது…” எனவும் தெரிவித்திருந்தார்.