(UTV|COLOMBO) – கொழும்பு, கோட்டையில் உள்ள ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் 47 மோட்டார் சைக்கிள்களும், மூன்று முச்சக்கர வண்டிகளும் தீக்கிரையாகியுள்ளதாக முதல் கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அலுவலகம் தெரிவித்துள்ளது.
குறித்த தீ விபத்தானது நேற்றிரவு(10) 10.00 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
தீ விபத்தையடுத்து தகவல் அறிந்த தீயணைப்பு பிரிவினர் ஐந்து தீயணைப்பு வாகனங்களை பயன்படுத்தி தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். எனினும் இந்த அனர்த்தத்தினால் 47 மோட்டார் சைக்கிள்களும், மூன்று முச்சக்கர வண்டிகளும் தீக்கிரையானது.
எனினும் இந்த அனர்த்தத்தினால் எவ்வித உயிர் சேதங்களும் காயங்களும் ஏற்படவில்லை எனத் தெரிவித்தார். தீ விபத்துக்கான காரணம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.