Trending News

ரோயல் பார்க் கொலையாளிக்கு ஜனாதிபதி மன்னிப்பு

(UTV|COLOMBO) – கடந்த 2015ம் ஆண்டு நாட்டில் பெரும் சர்ச்சையினை ஏற்படுத்திய ரோயல் பார்க் வெளிநாட்டு இளம் யுவதியை கொலை செய்த யூட் அன்டனி ஜயமகவிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு வழங்கியுள்ள நிலையில் அ வர சிறைச்சாலையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யூட் அன்டனி ஜயமகவிற்கு அவரது 19 வயதில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. 14 வருட சிறைக்குப் பின்னர் தனது 33 ஆவது வயதில் அவருக்கு போது மன்னிப்பு இவ்வாறு வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கொலை செய்யப்பட்ட யுவதி யுவோன் ஜோன்சனின் சகோதரி, தனது சகோதரியின் கொலையாளி விடயத்தில் இலங்கை ஜனாதிபதிக்கு ஏன் இவ்வளவு ஆர்வம் என கேள்வி எழுப்பி அண்மையில் பதிவொன்றினை வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பேராசிரியர் வின்னி விதாரன காலமானார்

Mohamed Dilsad

හිටපු ජනාධිපති රනිල් ඉන්දියාවට

Editor O

பொலிஸ் அதிகாரியை விபத்துக்குள்ளாக்கிய சம்பவம்-பாராளுமன்ற உறுப்பினரின் மகன் உட்பட ஐவர் கைது

Mohamed Dilsad

Leave a Comment