Trending News

தினேஷிற்கு ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம்

(UTV|COLOMBO) – ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாயில் 07 ஆம் திகதி ஆரம்பமாகிய 9 ஆவது உலக பரா மெய்வல்லுனர் போட்டித் தொடரில் பங்கேற்றுள்ள இலங்கையின் நட்சத்திர பரா மெய்வல்லுனரான தினேஷ் பிரியந்த ஹேரத் நேற்று(10) நடைபெற்ற ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

இலங்கை இராணுவத்தின் கஜபா படையணியின் ஓய்வு பெற்ற முன்னாள் வீரரான தினேஷ் பிரயந்த ஹேரத், 2018 ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற உலக பரா மெய்வல்லுனர் போட்டித் தொடரிலும் வெள்ளிப் பதக்கத்தை வென்றிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இந்த போட்டித் தொடரானது, ஜப்பானில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள பரா ஒலிம்பிக் விளையாட்டு விழாவுக்கான தகுதிகாண் போட்டியாக அமையவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நாளை-மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்

Mohamed Dilsad

பாராளுமன்ற வீதிக்கு தற்காலிகமாக பூட்டு

Mohamed Dilsad

புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்பு

Mohamed Dilsad

Leave a Comment