Trending News

பிற்பகலில் பெரும்பாலான பகுதிகளில் மழை

(UTVNEWS|COLOMBO) – நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில்  சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 தொடக்கம் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
 சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மாத்தறை மற்றும் களுத்தறை மாவட்டங்களிலும்  சில இடங்களில் 100 மி.மீ மழை விழ்ச்சி இடம்பெறக்கூடும்  கிழக்கு மாகாணத்தில் கரையோரப்பகுதியில் காலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலை வேளைகளில் பனிமூட்டத்துடனான கால நிலை காணப்படும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

භාණ්ඩ වර්ග 07ක මිල පහළට

Mohamed Dilsad

Person held for possessing counterfeit money

Mohamed Dilsad

Seven arrested over killing of underworld members

Mohamed Dilsad

Leave a Comment