(UDHAYAM, COLOMBO) – எச்.வன்என்.வன் வைரஸால் பீடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்தவண்ணம் இருக்கின்றன.
ஆனால் இதனைக் கட்டுப்படுத்த சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அகில இலங்கை தாதியர்கள் சங்கம் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
இந்த நோய்ப்பரவலை கட்டுப்படுத்த சுகாதார அமைச்சு அவசியமான நடவடிக்கை எதனையும் இன்னும் எடுக்கவில்லை என்று, சங்கத்தின் தலைவர் காமினி குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
அதேநேரம், எச்.வன்.என்.வன் வைரஸை தடுப்பதற்காக பயன்படுத்தப்படுகின்றன தெமிஃப்ளு என்ற ஊசி மருந்துக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இதனை விநியோக்க சுகாதார அமைச்சு தவறி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அரச மருந்து விநியோகப் பிரிவைத் தொடர்பு கொண்டு கேட்டப் போது, இந்த மருந்துக்கான கேள்வி தற்போது 15 சதவீதத்தால் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் இதனை விநியோக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.