Trending News

பாடகி லதா மங்கேஷ்கர் வைத்தியசாலையில் அனுமதி

(UTVNEWS | COLOMBO) – பிரபல இந்திய பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

நேற்று திடீரென ஏற்பட்ட மூச்சுத்திணறலை அடுத்து வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்ட அவர், அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

லதா மங்கேஷ்கர் செப்டம்பர் 28 அன்று 90வது பிறந்த நாளை கொண்டாடினார்.

இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற பின்னணி பாடகியான லதா மங்கேஷ்கர், சுமார் இருபதுக்கும் மேற்பட்ட மொழிகளில் பாடியுள்ளார். ரசிகர்களால் இசைக்குயில் என செல்லமாக அழைக்கப்படுகிறார்.

ஹிந்தி மட்டுமன்றி அவர் தமிழ் உள்ளிட்ட வேறு பல மொழிகளிலும் பாடல்கள் பாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தன்னுடைய நான்கு வயதிலேயே பாடத்தொடங்கி, கிட்டத்தட்ட 65 ஆண்டுகளைக் கடந்து, சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி, இந்திய திரையுலகில் மிகச்சிறந்த பின்னணி பாடகியாக விளங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு வலியுறுத்தல்

Mohamed Dilsad

காட்டுக்குள் சாகச பயணம் செய்யும் அமலா

Mohamed Dilsad

Travel ban imposed on Rajitha

Mohamed Dilsad

Leave a Comment