(UTV|COLOMBO) – ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு வழங்கப்படும் தற்காலிக அடையாள அட்டைகளுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்றுடன் நிறைவடைகின்றது
எந்தக் காரணத்திற்காகவும் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் தினம் நீடிக்கப்பட மாட்டாது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிக்கும்போது, ஆள் அடையாளத்தை உறுதிசெய்யும் ஆவணமாக தேசிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் கடவுச்சீட்டு, சாரதி அனுமதிப்பத்திரம், முதியவர்களுக்கான அடையாள அட்டை, ஓய்வூதிய அடையாள அட்டை, மதகுருமார்களுக்கான அடையாள அட்டை மற்றும் ஆட்பதிவுத் திணைக்களத்தினால் வௌியிடப்பட்ட தற்காலிக அடையாள அட்டையை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது
இதற்கு மேலதிகமாக, தேசிய அடையாள அட்டை தகவல்களை உறுதிசெய்யும் கடிதமும் வாக்களிப்பின்போது ஆள் அடையாளத்தை உறுதி செய்யும் ஆவணம் என்ற ரீதியில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.