(UTV|COLOMBO) – தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கும் இடையில் இன்று(13) முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.
இந்த சந்திப்பில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி தேர்தலை கண்காணிக்க சுமார் 17 வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் நாட்டுக்கு வருகைதரவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.