(UTV|COLOMBO) – கொழும்பு நகர் காற்றில் தூசுப் படிமங்களின் செறிவு மீண்டும் அதிகரித்துள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.
கொழும்பு நகரின் தூசு துகள்களின் செறிவுச்சுட்டி தற்போது 107ஆக பதிவாகியுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் சிரேஷ்ட புவிசரிதவியலாளர் சரத் பிரேமசிறி குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலைமை இன்று மேலும் அதிகரிக்கும் சாத்தியம் இருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் சுவாச நோயாளர்களை அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.