Trending News

ஆப்கானிஸ்தானில் கார்குண்டு தாக்குதல்- 7 பேர் பலி

(UTV|COLOMBO) – ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் கார்குண்டு வெடித்ததில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆப்கானிஸ்தானில் குறிப்பிட்ட சில பகுதிகளில் தலிபான் பயங்கரவாதிகள் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. அரசுக்கு எதிராக அவர்கள் பயங்கரவாத தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தலைநகர் காபூல் காசிம் தெருவில் இன்று காலை பயங்கரவாதிகள் காரில் வெடிகுண்டை வைத்து வெடிக்கச் செய்துள்ளனர்.

இந்த தாக்குதலில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன்,. 7 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Fire broke out in Dehiwala state bank

Mohamed Dilsad

மழையுடன் கூடிய காலநிலை தொடரக்கூடிய சாத்தியம்

Mohamed Dilsad

Nadal world number one after Italian win

Mohamed Dilsad

Leave a Comment