(UTV|COLOMBO) – எதிர்வரும் நாட்களில் தேர்தல் சட்ட திட்டங்களை மீறும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்டத்தினை அமுல்படுத்தப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
மேலும், இவ்வாறு அமைதிக் காலத்தினை மீறும் நபர்களுக்கு ஒரு வருட காலம் சிறைத் தண்டனை விதிக்க சட்டத்தில் இடம் உண்டு எனவும் தெரிவித்திருந்தார்.