(UTV|COLOMBO) – எதிர்வரும் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு தமது சொந்த இடங்களுக்கு செல்லும் மக்களின் வசதி கருதி 150 இற்கும் மேற்பட்ட பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்தியுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, பதுளை – கொழும்பு கோட்டைக்கு இடையில் 2 விசேட ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
பயணிகளின் வசதி கருதி, மேலதிகமாக ரயில்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.