(UTV|COLOMBO) – கடந்த மாதம் 8 ஆம் திகதியில் இருந்து நேற்று பிற்பகல் மாலை 4.00 வரை ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 3821 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 27 முறைப்பாடுகளும் மற்றும் தேர்தல் விதிமீறல்கள் தொடர்பில் 3687 முறைப்பாடுகளும் அவற்றுள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்றைய தினத்தில் மாத்திரம் 92 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அவை அனைத்தும் தேர்தல் விதிமீறல்கள் தொடர்பில் பதிவாகியுள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.