Trending News

அனைத்து பணியாளர்களுக்கும் உரிய விடுமுறையை வழங்க அறிவுறுத்தல்

(UTV|COLOMBO) – ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக அனைத்து பணியாளர்களுக்கும் உரிய விடுமுறையை வழங்க வேண்டும் என அரசாங்க மற்றும் தனியார் துறையினருக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

சம்பள குறைப்பு அல்லது தனியாள் விடுமுறை இரத்துச் செய்யப்படாமல் இந்த விடுமுறை வழங்கப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய, பணியாளர் ஒருவருக்கு, தமது பணியிடத்திலிருந்து 40 கிலோமீற்றர் தொலைவிற்குள் வாக்களிப்பு நிலையம் அமைந்திருக்குமாயின் அவருக்கு அரை நாள் விடுமுறை வழங்கப்பட வேண்டும்.

40 -100 கிலோமீற்றர் இடைவெளிக்குள் வாக்களிப்பு நிலையம் அமைந்திருக்குமாயின் ஒரு நாள் விடுமுறை வழங்கப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வாக்களிப்பு நிலையம் 100 -150 கிலோமீற்றருக்கு இடைப்பட்ட தொலைவில் அமைந்திருக்குமாயின், ஒன்றரை நாள் விடுமுறையும், 150 கிலோமீற்றருக்கு அதிக தொலைவில் இருக்குமாயின், இரண்டு நாட்கள் விடுமுறையும் வழங்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

Related posts

US diplomats held near Russian rocket test site

Mohamed Dilsad

Speaker request a report on Parliamentarians involved with PTL

Mohamed Dilsad

சுவசரிய இலவச அம்பியுலன்ஸ் சேவை – கிழக்கு மாகாணத்தில் அறிமுகம்

Mohamed Dilsad

Leave a Comment