(UTV|COLOMBO) – ஜனாதிபதித் தேர்தலுக்காக அடையாள அட்டையை விநியோகிக்கும் பணிகள் வழமை போன்று இடம்பெறுவதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உடனடியாக அடையாள அட்டையை பெறவிரும்புபவர்கள் நாளையும் திணைக்களத்திற்கு வருகை தந்து பெற்றுக் கொள்ள முடியும் என திணைக்கள ஆணையாளர் நாயகம் வியானி குணத்திலக்க தெரிவித்திருந்தார்.
கொழும்பில் உள்ள பிரதான காரியாலயம் தவிர காலி மாவட்ட காரியாலயத்தின் ஊடாகவும் அடையாள அட்டை விநியோகிக்கப்படுகிறது என்றும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, வாக்களிப்பிற்கு மாத்திரம் பயன்படுத்தக்கூடிய இரண்டு லட்சம் தற்காலிக அனுமதிப் பத்திரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் ஆணையாளர் நாயகம் வியானி குணத்திலக்க மேலும் தெரிவித்தார்.