Trending News

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கை

(UTV|COLOMBO) – இந்தோனேசியாவின் மொலுக்காஸ் தீவு அருகே உள்ள கடல் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ]

ரிக்டர் அளவுகோலில் 7.4 அளவுக்கு நிலநடுக்கத்தின் அதிர்வுகள் பதிவாகி இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

கடலுக்கு அடியில் 45 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் பாதிப்புகள் சுலவேசி தீவிலும் உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன

நிலநடுக்கத்தை தொடர்ந்து ஆழிப்பேரலைகள் எழும் என்ற அச்சத்தின் காரணமாக இந்தோனேசிய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது.

Related posts

30 வருடங்களாக இடம்பெற்ற யுத்தம் நிறைவடைந்து இன்றுடன் ஒன்பது வருடங்கள்

Mohamed Dilsad

அரச வங்கி ஒன்றில் கொள்ளை

Mohamed Dilsad

மறுபடியும் ஆபாச காட்சியில் காஜல்

Mohamed Dilsad

Leave a Comment