(UTV|COLOMBO) – பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் வெளியாகிய செய்தி உண்மைக்கு புறம்பானது என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவொன்றினையும் பதிவிட்டுள்ளார்.
The price of flour cannot be increased without the consent of the Cabinet appointed Cost-of-Living Committee and the Consumer Affairs Authority. As usual fake news factory Derana is spreading lies. Any vendor selling above the mandated price will be dealt with severely.
— Mangala Samaraweera (@MangalaLK) November 15, 2019
பிரிமா கோதுமை மாவின் விலை நேற்று (14) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பிரிமா நிறுவனம், நாடளாவிய ரீதியில் உள்ள தமது விநியோகஸ்தர்களுக்கு அறிவித்திருந்ததாக செய்திகள் வெளியாகியமையும் குறிப்பிடத்தக்கது.