Trending News

மாற்றுத்திறனாளிகளுக்கு விசேட ஏற்பாடு

(UTVNEWS | COLOMBO) – மாற்றுத்திறனாளிகள் தங்களுடைய சொந்த வாகனங்களில் வாக்களிப்பு நிலையத்தின் வாசல் வரை சென்று வாக்களிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை தேர்தல்கள் அலுவலக பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எஸ்.சுதாகரன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

எதிர்வரும் தேர்தலில் விசேட தேவையுடையவர்கள் தாங்கள் தங்களுடைய சொந்த வாகனங்களில் வாக்களிப்பு நிலையத்தின் வாசல் வரை சென்று வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதற்கான அனுமதிகளை தங்களுடைய மருத்துவச் சான்றிதழ்களை தெரிவத்தாட்சி அலுவலரிடம் சமர்ப்பித்து பெற்றுக்கொள்ள முடியும்.

இத் தேர்தலில் 35அபேட்சகர்கள் போட்டியிடுவதனால் 2அடி நீளமான இவ் வாக்குச் சீட்டை மேலிருந்து கீழாக உற்றுநோக்கி வாக்களிக்க அதிக நேரம் தேவைப்படும் என்பதனால் வாக்களிப்பின் நேரத்தை தேர்தல்கள் ஆணைக்குழு காலை 7மணி முதல் மாலை 5மணிவரை என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனவே சகல வாக்காளர்களும் காலை நேரத்தில் நேர காலத்துக்குச் சென்று உங்களது வாக்குகளை அளித்து இந்த ஜனாதிபதித் தேர்தலைச் சிறந்த முறையில் நடத்துவதற்கு பூரண ஒத்துழைப்பினை வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.

Related posts

கோட்டாபயவின் பிரஜாவுரிமை தொடர்பான மனு நிராகரிப்பு

Mohamed Dilsad

“Abolishing Executive Presidency, main focus of new Government,” Premier says

Mohamed Dilsad

போதை பொருளுடன் நபர் ஒருவர் கைது

Mohamed Dilsad

Leave a Comment