(UTV|COLOMBO) – ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன.
இதன்படி இன்று காலை 10.00 மணிவரை கண்டி, அனுராதபுரம், மாத்தறை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் 30 வீதமும் பொலன்னறுவை மாவட்டத்தில் 45 வீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.
ஹம்பாந்தொடையில் 35 வீதமும் யாழ்ப்பாணம் 25 வீதமும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 20 வீத வாக்குகளும் பதிவாயுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே புத்தளம் மாவட்டத்தில் 40 வீதமும் கேகாலை மாவட்டத்தில் 37 வீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.
திருகோணமலையில் 25 சதவீத வாக்குகளும், இரத்தினபுரியில் 44 சதவீத வாக்குகளும், வவுனியாவில் 25 சதவீத வாக்குகளும், மன்னாரில் 30 சதவீத வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சியில் 30 சதவீத வாக்குகளும், குருணாகலில் 40 சதவீத வாக்குகளும், மொனராகலையில் 37 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.