(UTV|COLOMBO) – ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்று பிற்பகல் 2 மணிவரையில் 70 சதவீத வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, பொலன்னறுவை, பதுளை, இரத்தினபுரி, கண்டி, ஹம்பாந்தோட்டை, மாத்தளை ஆகிய மாவட்டங்களில் 70 சதவீத வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், திருகோணமலை, குருணாகலை மற்றும் கொழும்பில் 60 சதவீத வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுள்ளன.புத்தளம், கம்பஹா, களுத்துறை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் 65 சதவீத வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுள்ளன.
காலி மாவட்டத்தில் 67 சதவீத வாக்குப்பதிவும் யாழ்ப்பாணத்தில் 54 சதவீத வாக்குப்பதிவும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.