(UTV|COLOMBO) – இன்று(16) நடைபெற்று முடிவடைந்திருக்கும் எட்டாவது ஜனாதிபதித் தேர்தலின் தேர்தல் சட்டமீறல்கள் மற்றும் வன்முறைகள் தொடர்பில் ஜனாதிபதித் தேர்தலைக் கண்காணிப்பதற்கான ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
ஜனாதிபதித் தேர்தலின் போது நாடு முழுவதும் தமது பிரதிநிதிகளினால் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், பெறப்பட்ட தகவல்கள் அனைத்தும் திங்கட்கிழமை வெளியிடப்படும் என்றும் தேர்தலைக் கண்காணிப்பதற்கான ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவின் தலைவர் மரிஸா மதியாஸ் தெரிவித்திருந்தார்.