(UTV|COLOMBO) – அம்பத்தலே முதல் மாளிகாந்த வரை நீர் கொண்டு செல்லும் பிரதான நீர் குழாயில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தப் பணிகள் காரணமாக கொழும்பு உள்ளிட்ட சில பிரதேசங்களில் நீர் விநியோகம் தடை படவுள்ளதாக தேசிய நீர்வழங்கள் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, கோட்டை, புறக்கோட்டை, சித்தம்பலம் ஏ காடினர் மாவத்தை மற்றும் டி.ஆர் விஜேவர்தன மாவத்தை உள்ளிட்ட பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் கொழும்பு 12 மற்றும் 13 ஆகிய பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படவுள்ளதாக குறித்த சபை தெரிவித்துள்ளது.
இன்று இரவுக்கு முன்னர் நீர் விநியோகத்தை வழமைக்கு கொண்டுவரநடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய நீர்வழங்கள் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.