(UTV|COLOMBO) – இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் நிறைவேற்று ஜனாதிபதியாக நாட்டின் பெரும்பான்மை மக்களின் ஆதரவோடு தேர்ந்தெடுக்கப்பட்ட மேன்மை தங்கிய கோத்தாபய ராஜபக்ஷ அவர்களுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸினதும் எனது மக்களினதும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜனாதிபதி தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித் பிரமேதாசவுக்கு ஆதரவளித்து, வாக்களித்த அனைவருக்கும் எனது விஷேட நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.
புதிய ஜனாதிபதி சகல இனங்களுக்கிடையிலும் சமாதானம், ஐக்கியம், சகோதரத்துவம், நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு ஆகியன நிலைகொள்ளும் வகையில் செயற்படுவாரென நம்புகின்றோம்.
நமது நாடென்றவகையில் இன ஐக்கியத்துடனும் சகோதர மனப்பாங்குடனும் அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு நாட்டை அபிவிருத்தியின் பால் இட்டுச்செல்ல புதிய ஜனாதிபதிக்கு வலிமையும் மனோதைரியமும் கிடைக்க வேண்டுமென பிரார்த்திக்கின்றேன்.
றிஷாட் பதியுதீன் பா.உ.
தலைவர் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்