Trending News

அனைத்து மக்களின் எதிர்ப்பார்ப்புக்களையும் நிறைவேற்ற நான் அர்ப்பணிப்புடன் செயற்படுவேன்

(UTV|COLOMBO) – ஜனநாயக கடமையை நிறைவேற்றிய அனைத்து வாக்காளர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட பின்னர் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.

முழுமையான அவரது உரை;

“… வரலாற்று சிறப்புமிக்க ருவான்வெலி சாயவில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்ற கிடைத்தமை நான் பெற்ற விசேட பாக்கியம். இந்நாட்டு பெரும்பாளான மக்கள் பெற்றுக் கொடுத்த வரலாற்று ரீதியிலான வெற்றியின் காரணமாக இது இடம்பெற்றுள்ளது.

நாம் அனைவரும் விரும்பும் நமது தாய் நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகவும், முப்படைத் தலைவராகவும் மற்றும் உங்களதும் உங்களது குழந்தைகளினதும் பாதுகாப்பினை பொறுப்பேற்கும் பாதுகாப்பு அமைச்சராகவும் நான் இன்று உங்களை சந்திக்கிறேன்.

வணக்கத்துக்கரிய மகா சங்க ​தேரர்களினால் பெற்றுக் கொடுக்கப்பட்ட ஆசிர்வாதமே, இந்த தேர்தலில் நான் வெற்றிப் பெறுவதற்கான பிரதான காரணமாக நான் கருதுகிறேன்.

இந்நாட்டின் பெரும்பான்மை பௌத்த சிங்கள வாக்குகள் மூலம் மாத்திரம் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெற முடியும் என எனக்கு தெரியும். எனினும், தமிழ் முஸ்லிம் மக்களையும் அந்த வெற்றியில் பங்காளிகளாக ஆகுமாறு நான் கோரியிருந்தேன்

எனினும் நான் எதிர்ப்பார்த்த அளவில் அதற்கு வரவேற்பு இருக்கவில்லை.
எனினும், நான் உங்கள் புதிய ஜனாதிபதி என்ற முறையில், மீண்டும் வேண்டிக் கொள்வதாகவது, இந்நாட்டின் எதிர்கால அபிவிருத்திக்காக உண்மையான இலங்கையராக என்னிடம் ஒன்றாக இணைந்து செயற்படுமாறாகும்.

தனக்காக வாக்கினை பயன்படுத்திய அனைத்து வாக்களார்களுக்கும் நான் இந்த சந்தர்ப்பத்தில் எனது நன்றியை மற்றும் கௌரவத்தினை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோல், எனக்கு வாக்களித்தாலும், வாக்களிக்காவிடினும், ஜனநாயக கடமையை நிறைவேற்றிய அனைத்து வாக்காளர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தெற்கில் சிங்கள பௌத்த குடும்பத்தில் இருந்து வந்த நான், கல்வி கற்றதும் இலங்கையின் பிரதான பௌத்த பாடசாலையிலாகும். அதன் காரணமாக பௌத்த தர்மம் எப்போதும் எனது எண்ணத்தில் இருக்கின்றது.

எனது பதவிக் காலத்தில் இந்நாட்டின் பௌத்த தர்மத்தினை பாதுகாத்து, மேம்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளேன்.

சுமார் ஆயிரம் வருடங்கள் வரலாற்றை கொண்ட சிங்கள கலாசாரம் மற்றும் உரிமைகளை நாம் அனைத்து சந்தர்ப்பங்களிலும் பாதுகாக்க வேண்டும்.

வரலாற்றில் இந்நாட்டின் பிரதான கலாசாரத்துடன் இணைந்து சமாதானத்துடனும், நல்லிணக்கத்துடனும் வாழ்ந்த அனைத்து இலங்கை குடிமக்களுக்கும் தமது மத மற்றும் தேசிய அடையாளத்தை பாதுகாத்துக் கொண்டு கௌரவத்துடன் வாழக்கூடிய உரிமையை நாம் எப்போதும் பாதுகாக்போம்.

எனது தேர்தல் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் அவருக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல், எம்முடன் இணைந்து வெற்றிக்காக உழைத்த அனைத்து கட்சிகளுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தனது கொள்கைகளை செயல்படுத்தக்கூடிய புதிய அரசாங்கம் ஒன்று அமைக்கப்படும்.

எந்த தேர்தலிலும் இல்லாத அளவில் பொதுமக்கள் எம்முடன் இணைந்து செயற்பட்டனர். வாக்களிப்பதற்காக இலங்கை வந்த வௌிநாட்டில் வசிக்கும் இலங்கையர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இனம் என்ற வகையில் ஒன்றிணைந்து நாட்டை முன்னேற்ற வேண்டிய பொறுப்பு தற்போது எம்மிடம் உள்ளது. தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விடயங்களும் தனது பதவிக் காலப் பகுதியினுள் நிறைவேற்ற நான் நடவடிக்கை எடுப்பேன்.

நாட்டின் தேசிய பாதுகாப்பே எனது அரசாங்கத்தின் பிரதான கடமை என்று நான் கருதுகிறேன். எமது தாய் நாடு தீவிரவாதம், பாதாள உலக செயற்பாடுகள், கப்பம் பெறுவோர், போதைப்பொருள் வர்த்தகர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் துஷ்பிரயோகம் அற்ற பாதுகாப்பான நாடாக மாற்ற தேவையான அரச பாதுகாப்பு இயந்திரத்தை நாம் மீண்டும் வலுப்படுத்துவோம்.

அனைத்து நாடுகளுடன் நட்புறவுடன் செயற்பட எதிர்ப்பார்த்துள்ளேன். எம்முடன் இணைந்து செயற்படும் போது எனது நாட்டின் ஒன்றையாட்சிக்கு, இறையாண்மைக்கு மதிப்பளிக்குமாறு அனைத்து நாடுகளுக்கும் கோரிக்கை விடுக்கிறோம். சுற்றுச் சூழலை பாதுகாப்பது நமது அனைவரினதும் கடமை.

ஐக்கிய நாடுகளின் நிலையான அபிவிருத்தியை செயற்படுத்தும் போது இலங்கையை உலகின் முன்னணியில் உள்ள நாடாக கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். எமது ஆட்சி முறையில் அரச துறையில் திறமை மற்றும் அனுபவத்திற்கு முதலிடம் வழங்கப்படும்.

எமது நாட்டு மக்கள் 21ஆவது நூற்றாண்டின் சவால்களுக்கு முகங்கொடுக்க நாட்டின் அனைத்து துறைகளிலும் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்த விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஒழுக்கமிக்க சமூகமொன்றை கட்டியெழுப்ப அனைவரினதும் ஒத்துழைப்பை நான் எதிர்ப்பார்த்துள்ளேன். நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் எமது கடமையானது, நாட்டின் அனைத்து மக்களுக்காகவும் சேவை செய்வதாகும்.

அதன்படி, எனக்கு வாக்களித்த மற்றும் வாக்களிக்காத அனைவரினதும் உரிமைகள் பாதுகாக்கப்படும். எமது தேர்தல் விஞ்ஞாபனத்தின் அடிப்படையில் நாட்டின் அனைத்து மக்களின் எதிர்ப்பார்ப்புக்களையும் நிறைவேற்ற நான் அர்ப்பணிப்புடன் செயற்படுவேன். பாரிய வேலைத்திட்டங்களை குறுகிய காலப்பகுதியில் செய்து முடிக்க வேண்டியுள்ளது.

அவசியமிருந்தால் எதையும் செய்யலாம். வெற்றி பெற முடியாத சவால் எதுவும் இல்லை. நாட்டை கட்டியெழுப்புவதற்காக எதிர்கால வேலைத் திட்டங்கள் எம்மிடம் உள்ளன. அது தொடர்பான திட்டங்கள் எனது தேர்தல் விஞ்ஞாபனம் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது. நான் இந்த நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாவேன்.

நாட்டின் நன்மைக்காக அதனை பயன்படுத்துவதற்கு நான் ஒருபோதும் பின்நிற்பதில்லை. நான் எனது நாட்டுக்கு அன்பு செலுத்துகிறேன். நான் எது நாடு தொடர்பில் பெருமை அடைகிறேன். எனது நாடு குறித்த வலி எனக்கு இருக்கிறது.
எதிர்காலத்தில் இலங்கையை முன்னேற்றுவதாற்காக அனைத்து இலங்கையர்களையும் எம்மிடம் இணையுமாறு நான் கோரிக்கை விடுக்கிறேன் ..” என்றார்.

Related posts

போலி நாணயத்தாள்களுடன் நால்வர் கைது

Mohamed Dilsad

சாதாரண மற்றும் உயர்தரப் பரீட்சைகளுக்கு வெளிநாடுகளிலிருந்தும் தோற்றலாம்?

Mohamed Dilsad

Sri Lanka decides to release 113 Indian fishermen

Mohamed Dilsad

Leave a Comment