Trending News

டி-20 தொடரை கைப்பற்றியது ஆப்கானிஸ்தான்

(UTV|COLOMBO) – லக்னோவில் நடைபெற்ற மூன்றாவது இருபதுக்கு – 20 கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது ஆப்கானிஸ்தான்.

ஆப்கானிஸ்தான் – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி-20 கிரிக்கெட் தொடர் லக்னோவில் நடைபெற்றது. முதல் இரண்டு போட்டிகளில் இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றிருந்தன.

நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் துடுபெடுத்தாட தேர்வு செய்தது.

இதன்படி அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கட்டுக்களை இழந்து 156 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதனையடுத்து 157 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலளித்து ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கட்டுக்களை இழந்து 127 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.

இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட இந்த 20 க்கு 20 கிரிக்கட் தொடரை 2 க்கு 1 என்ற அடிப்படையில் ஆப்கானிஸ்தான் அணி கைப்பற்றியது.

Related posts

Western Diplomats shun meeting with Foreign Minister on political crisis

Mohamed Dilsad

Tamil parties to announce stand on Election tomorrow

Mohamed Dilsad

Central Bank issues commemorative currency note for Independence Day

Mohamed Dilsad

Leave a Comment