Trending News

புதிய ஜனாதிபதிக்கு பல நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து

(UTV|COLOMBO) – இலங்கையின் புதிய ஜனாதிபதியாக சத்திய பிரமாணம் செய்த கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பல நாடுகளின் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

சீன அரசாங்கம் :-

பீஜிங் நகரில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஜேன் சூஹேன் இந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

புதிய ஜனாதிபதியுடன் இணைந்து இரண்டு நாடுகளுக்கிடையேயான நடைமுறையான உடன்படிக்கைகள் மூலம் சிறந்த பெறுபேற்றை பெற்று கொள்ள எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் சீனாவின் ஒரே நோக்கம், ஒரே பாதை என்ற உயர்ரக செயற்திட்டத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷ் :-

பங்களாதேஷ் ஜனாதிபதி அப்துல் ஹமீட், இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ் இலங்கை தேசிய மற்றும் சர்வதேச ரீதியாக முன்னேற்றம் அடையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் சம்பிரதாயபூர்வ நட்பு புதிய தலைமைத்துவத்தின் கீழ் தொடர்ந்தும் விருத்தியடையும் என்றும் பங்களாதேஷ் ஜனாதிபதி அப்துல் ஹமீட் தெரிவித்துள்ளார்.

ஜப்பான் :-

ஜப்பான் பிரதமர் சின்சோ அபே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

இலங்கை ஜப்பானுக்கிடையேயான உறவுகளை தொடர்ந்தும் வலுப்படுத்தி கொள்ள எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் பொருளாதார அபிவிருத்தி உள்ளிட்ட ஏனைய செயற்பாடுகளுக்காக இலங்கை முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு ஜப்பானின் ஒத்துழைப்பு கிடைக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

Public Utilities Commission rules out power crisis

Mohamed Dilsad

நிதியமைச்சர் சுங்கத் திணைக்களத்திற்கு திடீரென விஜயம்

Mohamed Dilsad

Possibility of evening thundershowers in Sri Lanka today

Mohamed Dilsad

Leave a Comment