(UTV|COLOMBO) – ஐக்கிய தேசிய முன்னணியின் எதிர்கால செயற்பாடுகள் மற்றும் தொடர்ந்தும் அரசில் அங்கம் வகிப்பதா இல்லாவிடின் எதிர்க்கட்சியில் அமர்வதா என்பது தொடர்பில் ஆராய நாளை(20) விசேட கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.
அதேபோல் பாராளுமன்றத்தை கலைப்பது குறித்தும் ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சி தலைவர்கள் இதன் போது இணக்கப்பாடு ஒன்றுக்கு வரவுள்ளதாக கூறப்படுகின்றது.
ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சி தலைவர்கள் நேற்று(18) கூடி கலந்துரையாடியதுடன் அதில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து ஜனாதிபதிக்கு அறிவிக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் கூறப்படுகின்றது.