(UTV|COLOMBO) – 2019 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட 35 வேட்பாளர்களில் 33 வேட்பாளர்களின் கட்டுப்பணம் அரச உடமை ஆக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கடந்த 16 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் 12.5 சதவீதத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் பேட்டியிட்ட கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் புதிய ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச ஆகியோரினால் மாத்திரமே பெற முடிந்துள்ளது.
இம்முறை ஜனாதிபதி தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளர் ஒருவர் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் 50 ஆயிரம் ரூபா வீதம் கட்டுப்பணம் செலுத்தினர். சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட ஒருவர் 75 ஆயிரம் ரூபா வீதம் கட்டுப்பணம் செலுத்தினர்.
அதற்கு அமைவாக இம்முறை ஜனாதிபதி தேர்தலில் 12.5 சதவீதத்திற்கு மேற்பட்ட வாக்குளை பெறமுடியாமல் போன 33 வேட்பாளர்களின் கட்டுப்பணம் அரச உடமையாக்கப்பட்டது,