(UTVNEWS | COLOMBO) – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பிவைத்துள்ளார்.
புதிய ஜனதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு புதிய காபந்து அரசாங்கமொன்றை அமைப்பதற்கு இடமளிக்கும் வகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று புதன்கிழமை பிரதமர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
மேலும் இன்றைய தினம் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
இதேவேளை இன்றைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ புதிய பிரதமர் தலைமையிலான 15 அமைச்சர்களைக் கொண்ட ஒரு காபந்து அரசாங்கத்தை அமைக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.