Trending News

சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று

(UTV|COLOMBO) – ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று(21) இன்றிரவு 7 மணிக்கு, கட்சி தலைமையகத்தில் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள தேர்தலுக்கான தயார்படுத்தல் குறித்து கலந்துரையாடவுள்ளதாக கட்சியின் பிரதித் தவிசாளர் பேராசிரியர் ரோஹண லக்‌ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஆட்சியின் கீழ் அமைக்கப்படவுள்ள அரசாங்கத்தின் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளல் மற்றும் தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பிலும் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியுடனும் கலந்துரையாடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக கட்சியின் ஊடகப் பேச்சாளரான பாராளுமன்ற உறுப்பினர் வீரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts

மஹிந்த தலைமையில் கூட்டு எதிர்கட்சியின் கூட்டம்

Mohamed Dilsad

UN Special Rapporteur to arrive in SL today

Mohamed Dilsad

ஜனாதிபதி நாடு திரும்பினார்

Mohamed Dilsad

Leave a Comment