Trending News

ஒன்றிணைந்த எதிர்கட்சியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களது விசேட கூட்டம் இன்று

(UTV|COLOMBO) – ஒன்றிணைந்த எதிர்கட்சியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களது விசேட கூட்டம் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின், கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இன்று(21) காலை 9 மணிக்கு இடம்பெறவுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்திருந்தார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது பதவி விலகல் கடிதத்தை உத்தியோகபூர்வமாக கையளிக்க உள்ள நிலையில், அதன் பின்னரான செயற்பாடுகள் மற்றும் திட்டங்கள் என்பன தொடர்பில் இதன்போது கலந்துரையாடி தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

Reginald Hudlin to direct “Shadowman”

Mohamed Dilsad

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்க் கொண்டு வெற்றியை ருசித்த கொல்கத்தா நைட்ரைடர்ஸ்

Mohamed Dilsad

மருதானை பகுதியில் 68 கிலோ கேரள கஞ்சா மீட்பு

Mohamed Dilsad

Leave a Comment