(UTV|COLOMBO) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக, விசேட மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் இருந்து அவரை விடுதலை செய்ய விசேட மேல் நீதிமன்றம் இன்று(21) உத்தரவு பிறப்பித்துள்ளது.
மெதமுலனையிலுள்ள, டி.ஏ. ராஜபக்ஷ ஞாபகார்த்த அருங்காட்சியக நிர்மாணத்தின் போது ரூபா 39 மில்லியன் அரசாங்க நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரினால் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.