(UTV|COLOMBO) – லாவோஸ் நாட்டில் தாய்லாந்து எல்லையை ஒட்டிய பகுதியில் 6.1 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
தாய்லாந்து எல்லையை ஒட்டியுள்ள சையன்புலி நகரின் வடமேற்கு திசையில் 53 கி.மீ தொலைவில் பூமியின் அடியில் சுமார் 33 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.
நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் கடுமையாக குலுங்கின. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான உடனடி தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.