(UTV|COLOMBO) – ஐக்கிய தேசியக் கட்சியின் 45 உறுப்பினர்களின் கையொப்பத்துடன் சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்குமாறு கோரி சபாநாயகரிடம் எழுத்துமூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் தவிசாளர் கபீர் ஹாசிம், ரஞ்சித் மத்தும பண்டார உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் 45 உறுப்பினர்கள், சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்குமாறு வலியுறுத்தியுள்ள கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.