Trending News

இனவாதிகளை யார்? உருவாக்கினர்; சந்திரிக்கா விளக்கம் [VIDEO]

(UTVNEWS | COLOMBO) இந்த நாட்டில் 2013 ஆம் ஆண்டுக்கு முன்னர் முஸ்லிம் மக்களுக்கு இந்த நாட்டில் எவ்வித பிரச்சணையும் இருக்கவில்லை ராஜபக்ஸ தரப்பினரால் உறுவாக்கியவர்களே முஸ்லிம் மக்களையும் அவர்களின் செத்துகளையும் தாக்கியதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

UTVக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “முஸ்லிம் மக்களுக்கு எதிராக பொதுபலசேனா, சிஹல ராவய உள்ளிட்ட அமைப்புகளை உருவாக்கினர்.

இவற்றை கோட்டாபய ராஜபக்ஸவே உருவாக்கினர். இவற்றை இல்லை என கூறினால் என்னிடம் ஆதரங்கள் இருக்கின்றது. அவர்களுடைய அலுவலகங்களை கோட்டாபய ராஜபக்ஸவே திறந்துவைத்தார். அதற்கான புகைப்படங்களும் தன்னிடம் இருக்கின்றன.

பித்து பிடித்தவர்கள் கைவிடுவதைப்போல முஸ்லிம்கள் மீது தாக்குவதற்கு இவர்களை விட்டனர். அவர்களுடைய உடமைகளை எறித்தனர். இதனை அடுத்துதாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றது. இது குறித்து கைதுசெய்யப்பட்ட சில இளைஞர்கள் வாக்கு மூலங்களை தெளிவாக கொடுத்துள்ளனர்.

2013 ஆம் ஆண்டு எமக்கு வேறுவழியின்றி இவ்வாறான செயல்களுக்கு உதவிசெய்ததாக அவர்கள் தெளிவாக கூறியுள்ளனர். நாம் முன்னெடுத்த நல்லிணக்க செயற்பாடுகளினால் சிஙகள மக்கள் குழப்பம் அடையவில்லை.

பிடிப்பட்ட அனைவரும் அவர்களுடன் இருப்பவர்கள். இனவாததத்தை தூண்டிவிட்டு, இவர்கள் வாக்குகளை சேகரிக்க முயற்சிக்கின்றனர். தற்போது சிறுபாண்மையினருக்கு மக்களுக்காக பணியாற்றுவதாக கூறுக்கின்றனர்.
எந்த வகையில் சிறுபாண்மை மக்களை பாதுகாப்பார்கள் என்று கூறுமாறு அவர்களிடம் சவால் விடுக்கின்றனர்”

தற்போது சிறுபான்மை மக்களை பாதுகாப்பதாக கூறி வருபவர்கள் அதற்காக எவ்வாறான திட்டத்தை வைத்துள்ளார்கள என்பது குறித்து விளக்கமளிக்க வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க வேண்டுகோள் ஒன்றை முன்வைத்துள்ளார்.

 

Related posts

Ray Abeywardena appointed new Chairman of CSE

Mohamed Dilsad

‘Theravada Tripitaka’ declared a National Heritage

Mohamed Dilsad

A meeting between Thondaman and Wigneshwaran

Mohamed Dilsad

Leave a Comment