Trending News

ரயில் சேவை நேர அட்டவணையில் திருத்தம்

(UTV|COLOMBO) – பயணிகள் மற்றும் பாடசாலை மாணவர்களின் தேவையை கருத்திற்கொண்டு இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில், இலங்கை ரயில் சேவை நேர அட்டவணையில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளதாக  ரயில் திணைக்கள போக்குவரத்து அதிகாரி வஜிர பொல்வத்த தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, பிற்பகல் 1.40க்கு கொழும்பு – கோட்டையிலிருந்து றம்புக்கணை நோக்கி பயணிக்கும் ரயில் இன்று முதல் பிற்பகல் 1.25க்கு புறப்பட உள்ளதுடன், அனைத்து ரயில் நிலையங்களிலும் அது நிறுத்தப்படவுள்ளது.

இதேநேரம், பிற்பகல் 1.45க்கு கொழும்பு – கோட்டைபியிலிருந்து பொல்கஹவளை வரை புதிய ரயில் ஒன்று சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற்பகல் 1.55க்கு கொழும்பு – கோட்டை முதல் வெயாங்கொடை வரை பயணிக்கும் ரயில் அனைத்து ரயில் நிலையங்களிலும் நிறுத்தப்படும் என ரயில் திணைக்கள போக்குவரத்து அதிகாரி வஜிர பொல்வத்த தெரிவித்துள்ளார்

Related posts

Windy condition expected to enhance over Sri Lanka

Mohamed Dilsad

இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று

Mohamed Dilsad

Chilean military plane ‘disappears’ with 38 aboard

Mohamed Dilsad

Leave a Comment