(UTV|COLOMBO) – பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌசி உள்ளிட்ட மேலும் சில பிரதேச சபை உறுப்பினர்களை கட்சியில் இருந்து விலக்க தீர்மானித்துள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
கட்சி தலைமையகத்தில் நேற்று(21) நடைபெற்ற மத்திய செயற்குழு கூட்டத்தில் இது குறித்து கலந்துரையாடப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.