Trending News

பல்கலைக்கழக பணிநிலை வெற்றிடங்களை நிரப்பும் பணி இடைநிறுத்தம்

(UTVNEWS | COLOMBO) – இலங்கையிலுள்ள சகல பல்கலைக்கழகங்களிலும் பணிநிலை வெற்றிடங்களை நிரப்பும் பணிகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான அறிவித்தல் நேற்று மாலை சகல பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சின் திறைசேரிச் செயலாளரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக அனைத்து ஆட்சேர்ப்புப் பணிகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி சில்வா நேற்று மாலை அனுப்பி வைத்துள்ள கடிதத்தின் மூலம் அறிவுறுத்தியிருக்கிறார்.

Related posts

Animated “Constantine: City of Demons” trailer released [VIDEO]

Mohamed Dilsad

அரச நிறுவனங்களினுள் அமைதி பேணப்பட வேண்டும்

Mohamed Dilsad

Canada orders deportation of Sri Lankan accused of murder

Mohamed Dilsad

Leave a Comment