(UTVNEWS | COLOMBO) – இஸ்ரேலின் நீலம் மற்றும் வெள்ளை கட்சித் தலைவர் பென்னி காட்ஸ் கூட்டணி அரசொன்றை அமைப்பதில் தோல்வி அடைந்த நிலையில் அங்கு ஓர் ஆண்டில் மூன்றாவது தேர்தல் இடம்பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
120 ஆசனங்கள் கொண்ட இஸ்ரேல் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பெற அறுபத்தி ஒரு இடங்கள் தேவை.
பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை காட்ட நெதன்யாகு தவறிய நிலையில் ஆட்சி அமைப்பதற்கு காட்ஸுக்கு ஜனாதிபதி கடந்த மாதம் சந்தர்ப்பம் அளித்தார்.
எனினும் பெரும்பான்மை காட்ட அவருக்கு வழங்கப்பட்ட 21 நாள் கெடுவில் அதனைச் செய்ய அவர் தவறியுள்ளார்.
கடந்த செப்டெம்பரில் நடைபெற்ற இஸ்ரேல் பாராளுமன்ற தேர்தலில் நீலம் மற்றும் வெள்ளை கட்சி மற்றும் நெதன்யாகுவின் லிகுட் கட்சி இரண்டும் கிட்டத்தட்ட சம அளவான ஆசனங்களையே வென்றன.