(UTV|COLOMBO) – நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலை தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் எதிர்நோக்கி வரும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ கவனம் செலுத்தி, அவர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
ஒரு தேர்தலின் போது மட்டுமல்ல, அதற்குப் பின்னரும் மக்களின் ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வது அரசாங்கத்தின் கடமையாகும் எனவும் பிரதமர் குறித்த பதிவில் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
I have discussed with the President the violence faced by UNP supporters, he assured me that it would be prevented. It is essential to ensure that the democratic rights of the people are protected not only during an election but after as well.
— Ranil Wickremesinghe (@RW_UNP) November 22, 2019