(UTVNEWS | COLOMBO) – திருகோணமலையில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் 6 பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர்கள் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸ உத்தரவிட்டுள்ளார்.
மேலும் சந்தேகநபர்களுக்கும் மற்றொரு குழுவுக்கும் இடையில் மீன் பிடி தொடர்பாக ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.