(UTVNEWS | COLOMBO) – தமது கட்சி ஆதரவாளர்கள் முகங்கொடுத்துள்ள வன்முறைகள் தொடர்பில் தான் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் கலந்துரையாடியதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்போது, ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தடுக்கப்படும் என ஜனாதிபதி உறுதியளித்தாக அவர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பொதுமக்களின் ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.