(UTVNEWS | COLOMBO) – பொதுமக்களின் பாதுகாப்பை தொடர்ந்தும் பேணும் நோக்குடன் இராணுவத்தினரை கடமையில் ஈடுபடுத்துவது குறித்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் கையெழுத்துடன் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதியால் நாட்டினுள் அமைதியைக் காக்கும் பொருட்டு இராணுவம், கடற்படை மற்றும் விமானப் படையினர் அழைக்கப்பட்டுள்ளனர்.